களக்காடு தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
வெள்ளப்பெருக்கு குறைந்ததை தொடர்ந்து களக்காடு தலையணையில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
திருநெல்வேலி
களக்காடு:
களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் கடந்த 2 நாட்களாக மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் களக்காடு தலையணையில் நேற்று முன்தினம் காலை முதல் தண்ணீர் வரத்து அதிகரித்தது. தடுப்பணையை மூழ்கடித்தப்படி காட்டாற்று வெள்ளம் பாய்ந்தோடியது. இதையடுத்து தலையணையில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர். இந்த நிலையில் நேற்று வெள்ளம் சற்று குறைந்தது. இதையடுத்து களக்காடு புலிகள் காப்பக துணை இயக்குனர் ரமேஷ்வரன் உத்தரவின் பேரில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டது. இந்த தகவலை வனச்சரகர் பிரபாகரன் தெரிவித்தார்.
Related Tags :
Next Story