கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி


கொடிவேரி அணையில்      சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி
x

கொடிவேரி அணையில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு

கோபி அருகே உள்ளது கொடிவேரி அணை. இங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் கடந்த 25 நாட்களுக்கு மேலாக சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படவில்லை. இந்த நிலையில் தண்ணீரின் வரத்து குறைந்துள்ளதால் கொடிவேரி அணையில் இன்று (சனிக்கிழமை) முதல் சுற்றுலாப் பயணிகள் மீண்டும் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.


Next Story