ஊட்டியில் இன்று கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் ரோஜா மலர்கள் சரிவர பூக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்


ஊட்டியில் இன்று கண்காட்சி தொடங்க உள்ள நிலையில் ரோஜா மலர்கள் சரிவர பூக்காததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
x
தினத்தந்தி 13 May 2023 1:15 AM IST (Updated: 13 May 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டியில் ரோஜா கண்காட்சி இன்று தொடங்க உள்ள நிலையில் ரோஜா பூங்காவில் மலர்கள் சரிவர பூக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

நீலகிரி

ஊட்டி

ஊட்டியில் ரோஜா கண்காட்சி இன்று தொடங்க உள்ள நிலையில் ரோஜா பூங்காவில் மலர்கள் சரிவர பூக்காததால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ரோஜா பூங்கா

கோடை சீசனையொட்டி நூற்றாண்டு பழமை வாய்ந்த ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் ஆண்டுதோறும் மே மாதம் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. ஊட்டி ரோஜா பூங்கா 4.40 ஹெக்டர் பரப்பளவில் அமைந்து உள்ளது. மலைச்சரிவான பகுதி மற்றும் 5 அடுக்குகளில் 4 ஆயிரத்து 200 வகைகளை சேர்ந்த 40 ஆயிரம் ரோஜா செடிகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

கோடை சீசனை முன்னிட்டு அந்த செடிகளில் ரோஜா மலர்கள் நடவு பணிகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது. ஊட்டி ரோஜா பூங்காவின் நுழைவு வாயில் பகுதியில் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நட்டு வைத்த ரோஜா செடி தற்போதும் உள்ளது. அந்த ரோஜா செடிக்கு ஜெயலலிதா என்று பெயரிடப்பட்டு இருக்கிறது. மேலும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட ரோஜா செடிகளும் உள்ளன. உலக ரோஜா சம்மேளனம் விசேஷ ரோஜா மலர்கள் மற்றும் இந்தியாவிலேயே சிறந்த ரோஜா பூங்காவுக்கான விருதை கடந்த 2006-ம் ஆண்டு ஊட்டி ரோஜா பூங்காவுக்கு வழங்கியது பெருமை ஆகும்.

சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்

சுற்றுலா பயணிகள் பூங்காவுக்குள் நுழைந்ததும் அவர்களை வரவேற்கும் வகையில் மஞ்சள், சிவப்பு, நீலம், பச்சை என பல்வேறு வண்ணங்களில் ரோஜா மலர்கள் பூத்துக்குலுங்கும். அங்கு அமைக்கப்பட்டு உள்ள 4 காட்சி முனைகளில் நின்றபடி பூங்காவின் பல்வேறு பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

இந்த நிலையில் இன்று (சனிக்கிழமை) ரோஜா கண்காட்சி தொடங்க உள்ளது. ஆனால் ரோஜா பூங்காவின் நுழைவு வாயில் உள்பட பல்வேறு பகுதிகளில் ரோஜா மலர்கள் சரிவர பூக்கவில்லை. வழக்கமாக ரோஜா பூ கட்டிங் பணிகள் பிப்ரவரி மாத ஆரம்பத்தில் தொடங்கப்படும். ஆனால் இந்த ஆண்டு சற்று தாமதமாக தொடங்கப்பட்டுள்ளது.

இதேபோல் தோட்டப்பணியாளர்கள் போராட்டம் காரணமாக இடைப்பட்ட காலங்களில் சரியாக மருந்து அடிக்கப்படாததால், தற்போது மலர்ந்துள்ள பூக்களும் பூச்சி தாக்குதலால் வளர்ச்சி குறைந்த நிலையில் உள்ளது.

ரோஜா பூக்கள் புத்துணர்வு இல்லாததால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்ப வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. அதே சமயத்தில் ஜூன் மாதத்தில் இதில் பூக்கள் பூத்து குலுங்கலாம் என்று கூறப்படுகிறது.


Next Story