புகைப்பட கண்காட்சியை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்
ஊட்டியில் புகைப்பட கண்காட்சியை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
ஊட்டி
ஊட்டியில் புகைப்பட கண்காட்சியை ரசிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
புகைப்பட கண்காட்சி
ஊட்டி உருவாகி 200 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாட தமிழக அரசு சாா்பில் ரூ.10 கோடி சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ஊட்டி பழங்குடியினா் பண்பாட்டு மையத்தில் புகைப்பட கண்காட்சி தொடங்கியது.
முன்னதாக சுற்றுச்சூழல், வனவிலங்கு, பறவைகள், வாழ்வியல், ஆதிவாசி மக்கள் ஆகிய 5 தலைப்புகளில் நீலகிரியில் எடுத்த புகைப்படங்களை அனுப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 368 பேர் தாங்கள் எடுத்த புகைப்படங்களை இ-மெயில் மூலம் அனுப்பி வைத்தனர். போட்டி குழுவால் பரிசீலிக்கப்பட்டு 120 புகைப்படங்கள் மட்டும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
வாழ்வியல் முறை
கண்காட்சியில் உள்ள முதல் அரங்கில், நீலகிரி மாவட்டத்தின் இயற்கை காட்சிகள், அரிய வகை பறவை இனங்கள், வனவிலங்குகள் மற்றும் நதோடா், கோத்தா், குரும்பா் உள்ளிட்ட பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறை, அவா்களின் கலாச்சாரம் ஆகியவை இடம் பெற்றுள்ளது.
2-வது அரங்கில் சர்வதேச புகைப்பட கலைஞர் ஜெயராமன் எடுத்த இயற்கை காட்சி சம்பந்தமான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் 72 பழங்கால கேமராக்களும் காட்சிக்கு வைக்கப்பட்டு உள்ளது. இது தவிர 7 அடி உயரத்தில் செல்பி எடுக்கும் வகையில் முப்பரிமான ரோலி பிளக்ஸ் கேமரா மாதிரி வைக்கப்பட்டுள்ளது. இதை சுற்றுலா பயணிகள், பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்வையிட்டு செல்கின்றனர்.