ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் உற்சாகம்
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக சுற்றிப்பார்த்தனர்.
சேலம்
ஏற்காடு:
கோடை விடுமுறை முடிந்து இன்று (திங்கட்கிழமை) பள்ளிகள் திறக்கப்படுகின்றன. கோடை விடுமுறையின் கடைசிநாளான நேற்று சுற்றுலா பயணிகள் கூட்டம் ஏற்காட்டில் அதிக அளவு இருந்தது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும் ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் வந்து இருந்தனர். இவர்கள் ஏற்காட்டில் உள்ள முக்கிய சுற்றுலா இடங்களான அண்ணாபூங்கா, ஏரி பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, லேடிசீட், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் குகை கோவில், பொட்டானிக்கல் கார்டன் போன்ற இடங்களில் குடும்பத்துடன் பொழுதை களித்தனர். படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்திருந்து படகு சவாரி செய்தனர். சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையின் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் ஒண்டிகடை அண்ணா பூங்கா படகு இல்ல சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
Next Story