ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை


ஒகேனக்கல் அருவியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை
x

ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

பென்னாகரம்,

தமிழகத்தின் முக்கிய சுற்றுலாத் தலமான ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள். அவர்கள் அருவியில் குளித்தும் பரிசலில் சென்றும் மகிழ்ந்து செல்வார்.

கர்நாடகத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு அதிகப்படியான நீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், கர்நாடகாவில் கே.ஆர்.எஸ், கபினி அணைகளில் இருந்து தலா 25 கன அடி நீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. இதனால் காவிரிக்கு வரும் நீரின் அளவானது 21 ஆயிரம் கன அடியில் இருந்து 50 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் தற்போது ஒகேனக்கல் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பால் சுற்றுலா பயணிகள் குளிக்க ,பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.


Next Story