கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

கொடைக்கானலில் வாரவிடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் வார விடுமுறையொட்டி சுற்றுலா பயணிகள் வந்து குவிய தொடங்கினர். இதனால் நகரில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்ததால் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக வத்தலக்குண்டு மலைப்பாதையில் பல்வேறு இடங்களில் பாலம் அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால் அந்த இடங்களில் அடிக்கடி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நின்றன.

கொடைக்கானலில் நேற்று காலை முதலே இதமான காற்றுடன் கூடிய வெப்பம் நிலவியதால் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வனப்பகுதியில் உள்ள பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட், பில்லர்ராக்ஸ், குணா குகை மற்றும் நகர் பகுதியில் உள்ள ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா ஆகிய சுற்றுலா இடங்களில் கூட்டம் அலைமோதியது. நட்சத்திர ஏரியில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். பின்னர் சைக்கிள் சவாரி, குதிரை சவாரி போன்றவற்றில் உற்சாகமாக ஈடுபட்டனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததன் காரணமாக நகரில் உள்ள தங்கும் விடுதிகள் நிரம்பின. இதன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story