களக்காடு தலையணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்
தலையணையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தபோதிலும் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்
களக்காடு:
தலையணையில் நேற்று சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு தண்ணீர் வரத்து குறைவாக இருந்தபோதிலும் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்.
தலையணை
நெல்லை மாவட்டம் களக்காடு தலையணையில் வெயில் சுட்டெரித்ததையடுத்து கடும் வெப்பம் நிலவியது. வெப்பத்தால் தண்ணீர் வற்றி வந்தது. இதற்கிடையே கோடை மழையால் தண்ணீர் வரத்து அதிகரித்தது.
தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளதால் தலையணைக்கு சுற்றுலா பயணிகள் கூட்டம், கூட்டமாக வருகின்றனர். உள்ளூர் மட்டுமின்றி வெளியூர்களில் இருந்தும் ஏராளமானோர் கார், வேன்களில் வந்து குவிகிறார்கள்.
ஆனந்த குளியல்
தண்ணீர் வரத்து குறைந்த போதிலும், தகிக்கும் வெப்பத்தில் இருந்து தப்பிக்க தலையணையில் நேற்று சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்துச் சென்றனர்.
சுற்றுலா பயணிகள் வருகையால் தலையணை களை கட்டி காணப்படுகிறது. அங்கு மூடப்பட்டுள்ள கேண்டீனை திறக்க வேண்டும் என்றும் சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.