ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருப்பத்தூர்

ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. இதனால் ஆந்திரா, கர்நாடகா, கேரளா, உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும், சென்னை, காஞ்சீபுரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

தற்போது வார விடுமுறை மற்றும் ஆயுத பூஜை, விஜயதசமி உள்ளிட்ட தொடர் விடுமுறையால் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். இங்கு படகு இல்லம், இயற்கைபூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை முருகர் ஆலயம், நிலாவூர் ஏரி, ஸ்ரீ கதவ நாச்சி அம்மன் திருக்கோவில் போன்ற பகுதிகள் அமைந்துள்ளன.

படகு சவாரி

இதில் சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் சுற்று பார்த்து மகிழ்ந்தனர். படகு இல்லத்தில் வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர். தனியார் சாகச விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கேற்று மகிழ்ந்தனர். வாகனங்களில் சென்ற சுற்றுலாப் பயணிகள் 14 கொண்டை ஊசி வளைவுகளிலும் இயற்கை காட்சிகளை ரசித்து, செல்போன்களில் செல்பி எடுத்து சென்றனர். சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்குள்ள அரசு விடுதிகள் மற்றும் தனியார் தங்கும் விடுதிகள் அனைத்தும் நிரம்பியது.


Next Story