ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


ஏலகிரி மலையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்கு தமிழ்நாடு மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை காரணமாக ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

இங்கு படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, சாகச விளையாட்டுக்கள், சுவாமிமலை முருகர் கோவில், நிலாவூர் ஏரி, கதவ நாச்சி அம்மன் கோவில் ஆகியவை அமைந்துள்ளன. ஏலகிரி மலைக்கு செல்லும் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது.

சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் குவிந்ததால் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் நின்று படகு சவாரி செய்தனர். இயற்கை பூங்காவிலும் சுற்றுலா பயணிகள்குவிந்தனர். மேலும் தனியார் சாகச விளையாட்டுகளில் குழந்தைகள் பங்கேற்று மகிழ்ந்தனர்.


Next Story