கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வாரவிடுமுறையையொட்டி கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

திண்டுக்கல்

'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதில் குறிப்பாக வார விடுமுறை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் ஆயிரக்கணக்கான வாகனங்களில் சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். அதன்படி நேற்று வாரவிடுமுறையைெயாட்டியும், தற்போது நிலவி வரும் குளிர் சீசனை அனுபவிப்பதற்காகவும் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து குவிந்தனர்.

கடந்த சில நாட்களாக பகல் நேரத்தில் நிலவி வந்த வெப்பம் குறைந்து, நேற்று பகல் நேரத்திலேயே மேகமூட்டம் தரை இறங்கியதை பார்த்து சுற்றுலா பயணிகள் ஆனந்தம் அடைந்தனர். அவர்கள் வனப்பகுதியில் உள்ள பைன் மரக்காடுகள், மோயர் பாயிண்ட், பில்லர் ராக், குணா குகை, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம், பேரிஜம் ஏரி ஆகிய இடங்களுக்கு சென்று புகைப்படம் மற்றும் 'செல்பி' எடுத்தனர். பின்னர் நகரின் மையப்பகுதியில் உள்ள நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றியுள்ள சாலையில் சைக்கிள் சவாரி மற்றும் குதிரை சவாரியும் செய்து சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்தன் காரணமாக சுற்றுலா தொழிலை நம்பியுள்ள பல்வேறு தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story