கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


கும்பக்கரை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 17 April 2023 12:15 AM IST (Updated: 17 April 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

கும்பக்கரை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.

தேனி

பெரியகுளம் அருகே இயற்கை எழில் சூழ்ந்த மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இந்த அருவிக்கு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதி மற்றும் கொடைக்கானல் பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படும். கடந்த சில நாட்களாக அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யவில்லை. மேலும் கோடை வெயிலின் தாக்கமும் அதிகரித்து வருகிறது. இதனால் அருவியில் நீர்வரத்து குறைந்தது. இந்நிலையில் வாரவிடுமுறையான நேற்று வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிப்பதற்காக கும்பக்கரை அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். ஆனால் அருவியில் மிக குறைந்த அளவில் தண்ணீர் கொட்டியது. இதனால் சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருந்து குளித்து சென்றனர்.


Related Tags :
Next Story