தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


தரங்கம்பாடி  கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்

மயிலாடுதுறை

பொறையாறு:

காணும் பொங்கலையொட்டி தரங்கம்பாடி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில், 400 ஆண்டுகள் பழமையான வரலாற்று சிறப்பு மிக்க டேனிஷ்கோட்டை உள்ளது. காணும் பொங்கலையொட்டி இந்த கடற்கரையில் நேற்று மாலையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் குடும்பத்துடன் வந்து குவிந்தனர்.

அவர்கள் தங்கள் குழந்தைகளுடன் கடலில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். சிறுவர்கள் குதிரை சவாரி செய்தும், வானில் பட்டம் பறக்க விட்டும் மகிழ்ந்தனர்.கடற்கரையில் உள்ள டேனிஷ் கோட்டை அருங்காட்சியகத்திற்கு சென்று அங்குள்ள பழமையான பீரங்கி, டேனிஷ் மன்னர்கள் பயன்படுத்திய பொருட்கள், பழங்கால நாணயங்கள், போர்வீரர்கள் தங்கும் அறைகள் உள்ளிட்ட பல்வேறு வரலாற்று சின்னங்களை கண்டு ரசித்தனர்.

கூட்டம் அலைமோதியது

ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்ததால் தரங்கம்பாடி கோட்டைக்குள்ளே கூட்டம் அலைமோதியது. இதன் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் தரங்கம்பாடி கடற்கரை கலைக்கட்டியது. இதனால், சுண்டல், ஐஸ்கிரீம், பாணி பூரி,, குளிர்பானம் உள்ளிட்ட விற்பனை படுேஜாராக இருந்தது. கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story