கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
திருக்காட்டுப்பள்ளி:
விடுமுறை நாளையொட்டி நேற்று கல்லணையில் குவிந்த சுற்றுலா பயணிகள் காவிரியில் குளித்து மகிழ்ந்தனர்.
கல்லணை
தஞ்சை மாவட்டத்தில் சுற்றுலா தலமான கல்லணையில் நேற்று விடுமுறை நாளையொட்டி கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் தஞ்சை, திருச்சி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் தனது குழந்தைகளுடன் கல்லணையை பார்க்க குவிந்தனர். மாலையில் கல்லணை பாலம், சிறுவர் பூங்கா உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. கல்லணையில் இருந்து காவிரி ஆற்றில் மிக குறைந்த அளவு தண்ணீர் திறக்கப்பட்டதால் கல்லணையை சுற்றி பார்க்க வந்த பெரும்பாலான மக்கள் கல்லணையில் உள்ள காவிரி பாலத்தின் கீழே அமைந்துள்ள நீர் ஒழுங்குகளில் அமர்ந்து குளித்து மகிழ்ந்தனர்.
போக்குவரத்து நெரிசல்
தொடர்ந்து சிறுவர் பூங்காவில் ஏராளமான குழந்தைகள் உற்சாகமாக விளையாடி மகிழ்ந்தனர். கரிகாலன் மணிமண்டபத்தை மக்கள் பார்த்து ரசித்தனர். விடுமுறை நாளில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவி்ந்ததால் கல்லணை பாலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.