கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனா்.
கடத்தூர்
கோபி அருகே கொடிவேரியில் பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு உள்ளது. இந்த அணையில் இருந்து தண்ணீர் அருவி போல் ஆர்ப்பரித்து கொட்டும். இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளிப்பதற்காக ஈரோடு, கோபி, சத்தியமங்கலம், திருப்பூர் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் இங்கு ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் குளித்து மகிழ்வதுடன், அங்குள்ள கடைகளில் விற்பனை செய்யப்படும் மீன் வறுவல்களை வாங்கி ருசித்து சாப்பிடுவர்.
கொடிவேரி அணையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். அதன்படி ஞாயிற்றுக்கிழமையான நேற்று விடுமுறை என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகள் கொடிவேரி அணைக்கு வந்து அருவிபோல் கொட்டி தண்ணீரில் குளித்து மகிழ்ந்தனர்.