வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வைகை அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:30 AM IST (Updated: 18 Jan 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி வைகை அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தேனி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே வைகை அணை உள்ளது. நேற்று காணும் பொங்கலையொட்டி வைகை அணையில் சுற்றுலா பயணிகள் ஏராளமானவர்கள் வந்து குவிந்தனர். பின்பு அணை பகுதியில் வலதுகரையில் இருந்து தரைப்பாலம் வழியாக நடந்து மறுகரைக்கு வந்தனர். அவர்கள் வைகை அணை பகுதியில் உள்ள பூங்காவில் குடும்பத்துடன் அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவுகளை சாப்பிட்டனர். அணை பகுதியில் நின்று அவர்கள் 'செல்பி' மற்றும் புகைப்படம் எடுத்தனர்.

பின்னர் பூங்காவில் உள்ள பொழுதுபோக்கு அம்சங்களான ஊஞ்சல், உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்களில் சிறுவர்கள் விளையாடி மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்ததை தொடர்ந்து அணையின் வலது கரையில் செயல்படும் சிறுவர்கள் உல்லாச ெரயில் இயக்கப்பட்டது. இதில் சிறுவர்கள், ஆண்கள், பெண்கள் அனைவரும் ஆராவாரத்துடன் பயணம் செய்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.


Next Story