நாகை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்


நாகை கடற்கரையில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 18 Jan 2023 12:15 AM IST (Updated: 18 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

காணும் பொங்கலையொட்டி நாகை கடற்கரையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

நாகப்பட்டினம்

காணும் பொங்கலையொட்டி நாகை கடற்கரையில் குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் அதிக அளவில் வருவது வழக்கம். இதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கடற்கரைக்கு செல்லும் பாதையில் மணல் மூட்டைகளை அமைத்து நடைபாதை அமைத்து தயார் நிலையில் வைத்திருந்தனர்.இந்த நிலையில் நேற்று காணும் பொங்கலை =யொட்டி நாகை கடற்கரையில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். சிறுவர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இன்றி அனைவரும் கடல் மணற்பரப்பில் விளையாடி மகிழ்ந்தனர்.கடற்கரை முழுவதும் எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது. குடும்பம், குடும்பமாக வீட்டில் தயாரித்த உணவுகளுடன் கடற்கரைக்கு வந்தனர். இவர்களில் பலர் பட்டம் விடுவது, விளையாட்டுகளில் ஈடுபடுவது, உறவினர்களுடன் அமர்ந்து உணவருந்துவது உள்ளிட்ட கேளிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் நாகை கடற்கரை களைகட்டியது.


Next Story