மேகமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்


மேகமலை அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 6 Jun 2023 12:15 AM IST (Updated: 6 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மேகமலை அருவியில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.

தேனி

கோம்பைத் தொழு அருகே மேகமலை அருவி அமைந்துள்ளது. மேகமலை வனப்பகுதியில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால் தற்போது அருவியில் குறைந்த அளவிலான நீர்வரத்து உள்ளது. இந்நிலையில் பள்ளி விடுமுறை மற்றும் வெயிலின் தாக்கம் அதிகரிப்பு காரணாக நேற்று தேனி, மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் அருவியில் குவிந்தனர். ஆனால் நீர்வரத்து குறைவாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் அருவியில் நீண்ட நேரம் காத்திருந்து குளித்துவிட்டு சென்றனர். சில சுற்றுலா பயணிகள் அருவியின் கீழ்ப்பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் குடும்பத்துடன் குளித்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வருகை புரிந்ததால் மயிலாடும்பாறை போலீசார் மற்றும் மேகமலை வனத்துறையினர் அருவியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டு சுற்றுலா பயணிகளிடம் இருந்து பிளாஸ்டிக் மற்றும் மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.


Next Story