குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்


குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x
தினத்தந்தி 2 Oct 2022 12:15 AM IST (Updated: 2 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவியில் ஆனந்தமாக குளித்து சென்றனர்.

தென்காசி

தென்காசி:

குற்றாலம் அருவிகளில் கடந்த 3 மாத காலமாக சீசன் களை கட்டி வந்தது. தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதாலும், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மழை இல்லாததாலும், குற்றாலம் அருவிகளில் நீர்வரத்து குறைந்து வருகிறது. தற்போது பள்ளிகளில் காலாண்டு தேர்வு விடுமுறை காலம் என்பதால், குற்றாலம் அருவிகளில் குளிப்பதற்கு வரும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது. அருவிகளில் தண்ணீர் குறைவாக விழுந்ததால், சுற்றுலா பயணிகள் நீண்ட வரிசையில் நிறுத்தப்பட்டு பல மணி நேரம் காத்திருந்து அதில் குளித்து சென்றனர். வடகிழக்கு பருவமழை பெய்ய தொடங்கினால் மட்டுமே அருவிகளில் நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே, குற்றாலம், தென்காசி பகுதியில் ஒரு சில இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.


Next Story