குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தென்காசி
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் தற்போது தண்ணீர் சீராக விழுந்து வருகிறது. கடந்த சில நாட்களாக அய்யப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. நேற்று முன்தினம் சபரிமலையில் மகரஜோதி பூஜை முடிவடைந்து சென்ற அய்யப்ப பக்தர்கள் நேற்று குற்றாலம் வந்தனர். மேலும் தைப்பொங்கலுக்கு மறுநாளான நேற்று காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. இதனாலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் நேற்று குற்றாலத்தில் குவிந்தனர். அருவிகளில் அவர்கள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். மேலும் ஏராளமானவர்கள் அங்குள்ள பூங்காக்களில் குடும்பங்களாக அமர்ந்து தாங்கள் கொண்டு வந்த உணவினை உண்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story