வேளாங்கண்ணியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேளாங்கண்ணியில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
வேளாங்கண்ணி:
ஆங்கில புத்தாண்டை கொண்டாட வேளாங்கண்ணியில் திரளான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
ஆங்கிலப்புத்தாண்டு
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயம் கீழை நாடுகளின் 'லூர்து நகர்' என்று அழைக்கப்படுகிறது.
கிறிஸ்தவ ஆலயங்களில் 'பசிலிக்கா' என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆண்டுதோறும் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறுவது வழக்கம்.
மின்விளக்கு அலங்காரம்
ஆங்கிலப்புத்தாண்டையொட்டி பேராலயம் முழுவதும் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. ேமலும் கீழ் கோவிலுக்கு செல்லும் பாதை, விண்மீன் ஆலயத்திற்குச் செல்லும் பாதை மற்றும் தியான மண்டபம் ஆகிய பகுதிகளில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக மின்விளக்கு வளைவு அமைக்கப்பட்டுள்ளது.வேளாங்கண்ணி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது.
வேளாங்கண்ணியில் குவியும் பக்தர்கள்
புத்தாண்டை கொண்டாட வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் குவிந்து வருகின்றனர். அதிக அளவில் சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் குவிந்து வருவதால் போலீசார், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் கடல் சீற்றமாக இருப்பதால் ஆழமான பகுதிக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை விடுத்தனர்.