ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்-படகு சவாரி செய்து உற்சாகம்
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர்.
சேலம்
ஏற்காடு:
ஏற்காடு
தமிழ் புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டுக்கு வருகை தந்தனர். அவர்கள் லேடிஸ் சீட், ஜென்ஸ் சீட், ரோஜா தோட்டம், பக்கோடா பாயிண்ட், சேர்வராயன் கோவில், கிளியூர் நீர்வீழ்ச்சி ஆகிய இடங்களுக்கு சென்று மகிழ்ந்தனர்.
நேற்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகரித்து காணப்பட்டதால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்வதில் ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக ஏற்காடு படகு இல்லத்தில் கூட்ட நெரிசல் அதிகம் இருந்தது.
களை கட்டியது
ஏற்காட்டில் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தந்ததால் முக்கிய சாலைகளான படகு இல்லம் சாலை, அண்ணா பூங்கா சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவதால் ஏற்காடு களை கட்டியுள்ளது.
Next Story