படகில் பாதுகாப்பு கவசம் அணிந்து பயணம் செய்த சுற்றுலா பயணிகள்


படகில் பாதுகாப்பு கவசம் அணிந்து பயணம் செய்த சுற்றுலா பயணிகள்
x

கன்னியாகுமரி-வட்டக்கோட்டை இடையே சொகுசு படகில் பாதுகாப்பு கவசம் அணிந்து பயணம் செய்த சுற்றுலா பயணிகள்

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

கன்னியாகுமரி-வட்டக்கோட்டை இடையே செல்லும் சொகுசு படகில், கலெக்டர் ஸ்ரீதர் நடவடிக்கையின் பேரில் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கவசம் அணிந்து பயணம் செய்தனர்.

சொகுசு படகு

கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் திருவள்ளுவர், தாமிரபரணி ஆகிய 2 அதிநவீன சொகுசு படகுகள் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக இயக்கப்படுகிறது. சாதாரண படகில் பயணம் செய்ய ரூ.350-ம், குளு குளு வசதி கொண்ட படகில் பயணம் செய்ய ரூ.450-ம் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

கன்னியாகுமரியில் இருந்து புறப்படும் இந்த படகு வட்டக்கோட்டைக்கு சென்று திரும்ப 1½ மணி நேரம் ஆகிறது. படகில் பயணம் செய்த படியே கன்னியாகுமரி கரையோர அழகை சுற்றுலா பயணிகள் ரசித்து வருகிறார்கள்.

பாதுகாப்பு கவசம் அணிந்த பயணிகள்

இந்த நிலையில் திருவள்ளுவர், தாமிரபரணி நவீன சொகுசு படகில் பயணம் செய்யும் சுற்றுலா பயணிகள் யாரும் பாதுகாப்பு கவசம் (லைப் ஜாக்கெட்) அணியவில்லை என்ற சர்ச்சை எழுந்தது. அத்துடன் இந்த ஆபத்தான பயணத்தை பாதுகாப்பானதாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையும் வைக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து நவீன சொகுசு படகில் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு தகுந்த பாதுகாப்பு கவசங்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். அதன்பேரில் நேற்று சொகுசு படகில் பயணம் செய்த சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு கவசம் வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் நேற்று பாதுகாப்பு கவசம் அணிந்து படகுகளில் பயணம் செய்தனர்.


Next Story