அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம்


அம்மையநாயக்கனூர் பேரூராட்சி கூட்டம்
x
தினத்தந்தி 29 March 2023 2:15 AM IST (Updated: 29 March 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

அம்மையநாயக்கனூரில் பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது.

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று பேரூராட்சி கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பேரூராட்சி தலைவர் எஸ்.பி.செல்வராஜ் தலைமை தாங்கினார். செயல் அலுவலர் பூங்கொடி முருகு முன்னிலை வகித்தார். துணைத்தலைவர் விமல்குமார் வரவேற்றார். இதில், அனைத்து கவுன்சிலர்களும் கலந்துகொண்டனர்.

பின்னர் நடந்த கூட்டத்தில், பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் அடிப்படை வசதிகள் மேம்படுத்துவது, நகர்ப்புற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்துவது குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் சுகாதார ஆய்வாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


Next Story