வாறுகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு


வாறுகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு
x

சிவகிரி பகுதியில் வாறுகால் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் ஆய்வு செய்தார்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி பேரூராட்சி பகுதியில் 15-வது நிதிக்குழு மானிய திட்டம் நிதியில் இருந்து ரூ.59.70 லட்சம் மதிப்பீட்டில் 1, 2, 8, 9, 10, 11 ஆகிய வார்டுகளில் உள்ள தெருக்களில் வாறுகால் வசதி, பேவர் பிளாக் கற்கள் மற்றும் குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனை பேரூராட்சி தலைவர் கோமதி சங்கரி சுந்தரவடிவேலு, துணைத்தலைவர் லட்சுமிராமன், நிர்வாக அதிகாரி நவநீதகிருஷ்ணன், நியமனக்குழு உறுப்பினர் விக்னேஷ் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


Next Story