தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்- கோவை பாசஞ்சர் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து


தண்டவாள பராமரிப்பு பணி: சேலம்- கோவை பாசஞ்சர் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து
x

தண்டவாள பராமரிப்பு பணியால் சேலம்- கோவை பாசஞ்சர் ரெயில் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

சேலம்

சூரமங்கலம்:

கோவை- திருப்பூர் இடையே ரெயில் தண்டவாளங்களில் பல்வேறு இடங்களில் பொறியியல் பராமரிப்பு பணி நடக்கிறது. இதனால் கோவை- சேலம் பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 06802) கோவையில் இருந்து காலை 9.05 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இன்று (சனிக்கிழமை) முதல் வருகிற 30-ந் தேதி வரை முழுவதும் ரத்து செய்யப்படுகிறது,

இதேபோல் மறுமார்க்கத்தில் செல்லும் சேலம்- கோவை பாசஞ்சர் ரெயில் (வண்டி எண் 06803) சேலத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் இந்த ரெயில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

இந்த தகவல் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story