சாலையோரத்தில் குப்பைகளை கொட்டியதால் பேரூராட்சி டிராக்டர் சிறைபிடிப்பு


சாலையோரத்தில் குப்பைகளை கொட்டியதால் பேரூராட்சி டிராக்டர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 29 March 2023 2:15 AM IST (Updated: 29 March 2023 2:16 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டியதால் பேரூராட்சி டிராக்டர் சிறைபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல்

பழனி அருகே நெய்க்காரப்பட்டி பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் சேகரிக்கப்படுகிற குப்பைகள், கொழுமம் சாலையோரத்தில் கொட்டப்படுகிறது. இந்த குப்பைகளில் இருந்து துர்நாற்றம் வீசுவதோடு, தீ வைத்து எரிப்பதால் சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது. மேலும் புகை மூட்டத்தினால் வாகனத்தில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை நெய்க்காரப்பட்டியில் சேகரித்த குப்பைகளை, பேரூராட்சிக்கு சொந்தமான டிராக்டரில் கொண்டு வந்து சாலையோரத்தில் கொட்டினர். இதனைக்கண்ட அப்பகுதி மக்கள், டிராக்டரை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி செயல்அலுவலர் பாஸ்கரன், தலைவர் கருப்பாத்தாள் காளியப்பன், கவுன்சிலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்தி டிராக்டரை விடுவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Related Tags :
Next Story