தூய்மை பணிக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி
தூய்மை பணிக்கு டிராக்டர் வழங்கும் நிகழ்ச்சி
நாகப்பட்டினம்
தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளர்ச்சித்துறை மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ.8.48 லட்சத்தில் வெள்ளப்பள்ளம், நாலுவேதபதி ஊராட்சிகளில் தூய்மை பணிகளுக்கு 2 டிராக்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் மீன் வளர்ச்சி கழகத் தலைவர் கவுதமன் கலந்துகொண்டு 2 ஊராட்சிகளின் டிராக்டர் சாவிகளை ஊராட்சி தலைவரிடம் வழங்கினார். இதில் மாநில விவசாயிகள் ஆலோசனை குழு உறுப்பினர் மகாகுமார், ஒன்றியக்குழு தலைவர் தமிழரசி, வட்டார வளர்ச்சி அலுவலர் அண்ணாதுரை, ஊராட்சி மன்ற தலைவர்கள் ஞானசுந்தரி சுந்தரபாண்டியன், கற்பகம் நீலமேகம் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story