கட்டிங் எந்திர பெல்ட் அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பலி


கட்டிங் எந்திர பெல்ட் அறுந்து விழுந்து  டிராக்டர் டிரைவர் பலி
x
தினத்தந்தி 6 Oct 2022 12:15 AM IST (Updated: 6 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பேரிகை அருகே தனியார் கிரானைட் தொழிற்சாலையில் கட்டிங் எந்திரத்தின் பெல்ட் அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பலியானார்.

கிருஷ்ணகிரி

ஓசூர்:

பேரிகை அருகே தனியார் கிரானைட் தொழிற்சாலையில் கட்டிங் எந்திரத்தின் பெல்ட் அறுந்து விழுந்து டிராக்டர் டிரைவர் பலியானார்.

டிராக்டர் டிரைவர்

சூளகிரி அருகே உள்ள தோரிப்பள்ளி பக்கமுள்ள கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 35). டிராக்டர் டிரைவர். இவர் நேற்று முன்தினம் பேரிகை அருகே தாசன்புரம் பகுதியில் உள்ள ஒரு கிரானைட் தொழிற்சாலையில் வீணாகும் கிரானைட் கற்கள் லோடை ஏற்றுவதற்காக சென்றார்.

அங்கு கிரானைட் கற்களை வெட்ட கூடிய எந்திரத்தின் அருகில் டிராக்டரை நிறுத்தி விட்டு நாகராஜ் நின்று கொண்டு இருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக கட்டிங் எந்திரத்தின் பெல்ட் அறுந்து நாகராஜ் மீது விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த நாகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார்.

2 பேர் மீது வழக்கு

இதுகுறித்து தகவல் அறிந்ததும் பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து போன நாகராஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக இறந்த நாகராஜின் மனைவி ருத்ரவேணி பாகலூர் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கிரானைட் தொழிற்சாலை உரிமையாளர் கான்சிங் மற்றும் ஆபரேட்டர் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story