தூய்மை பணியாளர்களுக்கு டிராக்டர்


தூய்மை பணியாளர்களுக்கு டிராக்டர்
x

காட்பாடியில் தூய்மை பணியாளர்களுக்கு அமைச்சர் துரைமுருகன் டிராக்டர் வழங்கினார்.

வேலூர்

தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் தூய்மை பாரத இயக்க திட்ட தூய்மை பணியாளர்களுக்கு டிராக்டர் வழங்கும் விழா காட்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி பேசினார்.

சிறப்பு அழைப்பாளராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்து கொண்டு தூய்மை பணியாளர்களுக்கு டிராக்டர் வழங்கி சிறப்புரை ஆற்றினார். ஏ.பி.நந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி தலைவர் மு.பாபு, மேயர் சுஜாதா, துணை மேயர் எம்.சுனில் குமார், காட்பாடி ஒன்றியக் குழுத்தலைவர் வேல்முருகன், துணைத்தலைவர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story