வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
பாளையங்கோட்டையில் வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
நெல்லை மாநகர் மாவட்ட வர்த்தக காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. மாவட்ட வர்த்தக காங்கிரஸ் தலைவர் ஆபிரகாம் வெஸ்லி தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் சேவியர், மாவட்ட பொதுச்செயலாளர் ஜான்பாபு, பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மத்திய மந்திரி தனுஷ்கோடி ஆதித்தன், கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார், ஓ.பி.சி. பிரிவு மாவட்ட தலைவர் டியூக் துரைராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்கள்.
கூட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி பூத் கமிட்டி விரைவாக அமைப்பது, ராகுல்காந்தியின் எம்.பி. பதவி நீக்கத்தை கண்டித்து நெல்லை மாநகர் மாவட்டத்தின் சார்பில் மானூரில் நாளை (வியாழக்கிழமை) நடைபெறும் தபால் நிலைய முற்றுகை போராட்டத்தில் திரளாக கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட செயலாளர் நெகோமியா, இளைஞர் காங்கிரஸ் துணைத்தலைவர் ராஜீவ்காந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.