செஞ்சியில்வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்மாநில தலைவர் வெள்ளையன் பங்கேற்பு


செஞ்சியில்வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்மாநில தலைவர் வெள்ளையன் பங்கேற்பு
x
தினத்தந்தி 16 March 2023 12:15 AM IST (Updated: 16 March 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

செஞ்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம்

செஞ்சி,

செஞ்சி தாலுகா வர்த்தகர் சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செஞ்சியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதற்கு செஞ்சி தாலுகா வர்த்தக சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் வெங்கட், பொருளாளர் அம்ஜத் பாண்டே, கவுரவ தலைவர் கலியமூர்த்தி, மாவட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக வர்த்தக சங்க மாநில தலைவர் வெள்ளையன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மே மாதம் 5-ந்தேதி 40-வது வணிகர் தின விழா மாநாடு செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. எனவே செஞ்சி வட்டார வர்த்தக சங்கத்தினர் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என்றார்.

இதில் சங்க இணை செயலாளர் சுமங்கலி ரவி, துணைத்தலைவர் ராஜகோபால், ஆலோசகர்கள் செல்வானந்தம், குறிஞ்சிவளவன், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் தமிழரசன், மணிலா வியாபாரிகள் சங்கம் செல்வம், பழக்கடை சங்கம் சரவணன், செல்போன் வியாபாரிகள் சங்கம் ரமேஷ்பாபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story