குமராட்சியில்வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
குமராட்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
காட்டுமன்னார்கோவில்,
சிதம்பரம் அடுத்த குமராட்சியில் வர்த்தக சங்க நிர்வாகிகளுக்கான ஆலோசனை கூட்டம் நடந்தது. இதற்கு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவரும், வர்த்தக சங்கத் தலைவருமான கே.ஆர்.ஜி.தமிழ்வாணன் தலைமை தாங்கினார். செயலாளர் மணிவண்ணன் சங்க அறிக்கையை வாசித்தார். முன்னதாக அனைவரையும் ஒருங்கிணைப்பாளர் அப்துல்பாசித் வரவேற்று பேசினார்.
இக்கூட்டத்தில் வருகிற மே 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு குமராட்சியில் உள்ள அனைத்து கடைகளுக்கும் விடுமுறை விடப்படுவதுடன், அன்றைய தினம் ஈரோட்டில் விக்கிரமராஜா தலைமையில் நடைபெறும் மாநாட்டில் பெருந்திரளாக கலந்து கொள்வது, குமராட்சியில் புதிய தீயணைப்பு நிலையம், 108 ஆம்புலன்ஸ் வசதி, பொதுக் கழிப்பறை அமைக்க பரிந்துரை செய்த வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் திருமாவளவன், காட்டுமன்னார்கோவில் எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் மற்றும் தீயணைப்பு நிலையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்து கொடுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வர்த்தக சங்கம் சார்பில் நன்றி தெரிவிப்பது, குமராட்சி பகுதியில் போலீசார் இரவு நேரத்தில் ரோந்து பணி மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் ஆறுமுகம், துரைசிங்கம், பார்த்தசாரதி, மணிகண்டன், குமரவடிவு, பிரதீப்ஜெயின், அப்துல்ரவுப் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் குட்டிமணி நன்றி கூறினார்.