தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தேனியில் தொழிற்சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி
தேனி பழைய பஸ் நிலையம் அருகில் எஸ்.டி.டி.யு. தொழிற்சங்கம் சார்பில், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், பழைய 44 தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் தமீமுன் அன்சாரி தலைமை தாங்கினார். மாநில துணைத்தலைவர் அப்துல் சிக்கந்தர் முன்னிலை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் ரவூப் நிஸ்தார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு பேசினர். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story