புத்தளம் அருகேமனைவி இறந்த சோகத்தில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை


புத்தளம் அருகேமனைவி இறந்த சோகத்தில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 16 Oct 2022 12:15 AM IST (Updated: 16 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

புத்தளம் அருகேமனைவி இறந்த சோகத்தில் வியாபாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி

மேலகிருஷ்ணன்புதூர்:

புத்தளம் அருகே உள்ள பெத்தபெருமாள் குடியிருப்பை சேர்ந்தவர் கமலன் (வயது63), வியாபாரி. இவர் புத்தளம் பகுதியில் டீக்கடை நடத்தி வந்தார். இவருக்கு இரண்டு மனைவிகள் இருந்தனர். 2-வது மனைவி முதல் மனைவியின் தங்கையாகும். 2-வது மனைவி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். அதன்பின்பு கமலன் மிகவும் மன வேதனையில் இருந்து வந்தார். 2-வது மனைவி இறந்த சோகத்தை அடிக்கடி முதல் மனைவியிடம் சொல்லி வேதனைப்பட்டு வந்தார்.

இந்த நிலையில் சம்பவத்தன்று அவர் நடத்திவந்த டீக்கடையில் தூக்குப்போட்டு தற்கொலை ெசய்து கொண்டார். இதுகுறித்து அவரது முதல் மனைவி தங்ககனி சுசீந்திரம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாயிலெட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் ராபர்ட் செல்வசிங் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story