மண்எண்ெணய் கேனுடன் வியாபாரி உள்ளிருப்பு போராட்டம்


மண்எண்ெணய் கேனுடன் வியாபாரி உள்ளிருப்பு போராட்டம்
x

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் மகளின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய கேட்டு மண்எண்ணெய் கேனுடன் உள்ளிருப்பு ேபாராட்டம் நடத்திய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

குழித்துறை நகராட்சி அலுவலகத்தில் மகளின் பிறப்பு சான்றிதழில் திருத்தம் செய்ய கேட்டு மண்எண்ணெய் கேனுடன் உள்ளிருப்பு ேபாராட்டம் நடத்திய வியாபாரியால் பரபரப்பு ஏற்பட்டது.

பிறப்பு சான்றிதழ்

தக்கலை அருகே உள்ள மேக்காமண்டபம் பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது50), வியாபாரி. இவரது 2-வது மகள் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பிறந்தார். அவருக்கு குழித்துறை நகராட்சியில் இருந்து பிறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டது. அந்த சான்றிதழில் பன்னீர் செல்வத்தின் பெயர் தவறாக இருந்தது. இதையடுத்து பெயரை திருத்தம் செய்து தர கேட்டு பன்னீர் செல்வம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு குழித்துறை நகராட்சி அலுவலக சுகாதார அலுவலகத்தில் விண்ணப்பம் செய்தார்.

ெதாடர்ந்து சான்றிதழ் கேட்டு நகராட்சி அலுவலகத்தில் பல முறை சென்று கேட்டார். ஆனால் அவருக்கு சான்றிதழில் திருத்தம் செய்து வழங்கப்படவில்லை.

உள்ளிருப்பு போராட்டம்

இதனால் வேதனை அடைந்த பன்னீர்செல்வம் நேற்று முன்தினம் ஒரு மண்எண்ணெய் கேனுடன் குழித்துறை நகராட்சி அலுவலகத்துக்கு வந்தார். தொடர்ந்து அவர் பிறப்புச் சான்றிதழில் திருத்தம் செய்து வழங்க வலியுறுத்தி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவரிடம் நகராட்சி அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 'சான்றிதழில் திருத்தம் செய்து தந்தால் மட்டுமே இந்த இடத்தை விட்டு செல்வேன்' என அவர் உறுதியாக கூறினார்.

இதையடுத்து ஒரு மணி நேரத்தில் சான்றிதழில் திருத்தம் செய்து பன்னீர்செல்வத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். அத்துடன் அங்கு ஏற்பட்ட பரபரப்பும் அடங்கியது.


Next Story