சீர்காழி பகுதியில் பனியால் பூக்கள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் பாதிப்பு
சீர்காழி பகுதியில் பனியால் பூக்கள் வரத்து குறைந்ததால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மயிலாடுதுறை
சீர்காழி:
சீர்காழியை சேர்ந்த பூ வியாபாரி முனுசாமி கூறுகையில், பெண்கள் வாசனை தரும் பூக்களான மல்லி, அரும்பு, சந்தன முல்லை, முல்லை, ஜாதி மல்லி உள்ளிட்ட பூக்களைத்தான் விரும்பி வாங்குவார்கள். ஆனால் தற்பொழுது பனிக்காலமாக இருப்பதால் பூக்கள் செடியிலேயே கருகி வீணாகி விடுகிறது. இதனால் பூக்களின் வரத்து குறைவதால் மல்லிகைப்பூக்களின் விலை கடுமையாக உயர்ந்து விட்டது.இதன் காரணமாக பெண்கள் பூக்களை குறைந்த அளவே வாங்கிச் செல்கின்றன. மேலும் விலை குறைந்த காக்கரட்டான் பூக்கள், கதம்பம், செவ்வந்திப் பூ உள்ளிட்ட வாசனை இல்லாத பூக்களை வாங்கி செல்கின்றனர். இந்த தொழிலை நம்பி உள்ள வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றார்.
Related Tags :
Next Story