வியாபாரிகள் சங்க தலைவர் தேர்வு
கடையத்தில் வியாபாரிகள் சங்க தலைவர் தேர்வு செய்யப்பட்டார்
கடையம்:
கடையம் வியாபாரிகள் சங்கத்தின் சிறப்பு செயற்குழு கூட்டம் வியாபாரிகள் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு சங்க செயலாளர் ஷேக் முகம்மது தலைமை தாங்கினார். டி.எஸ்.முருகன், கென்னடி, ஏ.பி.சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிருஷ்ணா ஜூவல்லர்ஸ் பிரமநாயகம் வரவேற்றார். மறைந்த முன்னாள் தலைவர் சந்தோஷ் நாடார் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
கூட்டத்தில் பாவா, கே.ஆர்.எஸ்.சங்கர் அப்துல்சலாம், முகம்மது, மாடசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சங்கத்தின் புதிய தலைவராக ஸ்ரீநாத் ஏஜென்சி மற்றும் கே.எஸ்.எம்.நடராஜ நாடார் பர்ம் (கீழ மரக்கடை) உரிமையாளர் முருகேசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்ட முருகேசனுக்கு நிர்வாகிகள் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தனர்.
முடிவில் அண்ணாமலை நன்றி கூறினார்.