கடைகளை நடத்த மேலும் 3 ஆண்டு அவகாசம் தர வேண்டும்கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் வலியுறுத்தல்
அரக்கோணம் மார்க்கெட்டை இடிப்பதற்கு முன்பு கடைகளை நடத்த மேலும் 3 ஆண்டு அவகாசம் தர வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் வலியுறுத்தினர்.
அரக்கோணம்
அரக்கோணம் மார்க்கெட்டை இடிப்பதற்கு முன்பு கடைகளை நடத்த மேலும் 3 ஆண்டு அவகாசம் தர வேண்டும் என கருத்து கேட்பு கூட்டத்தில் வியாபாரிகள் வலியுறுத்தினர்.
அரக்கோணம் போலீ்ஸ் நிலைய கட்டம் அருகே காய்கறி மார்க்கெட் 250 கடைகளுடன் கடந்த 1982-ம் ஆண்டு கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது. தற்போது அங்கு 194 கடைகளில் காய்கறிகள், பழங்கள், பூக்கள், பொருட்கள் விற்கப்படுகின்றன. மேலும் இறைச்சி, மீ்ன் விற்பனைக்கு தனியாக 15 கடைகள் உள்ளன. இந்த மார்க்கெட் கட்டப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டதால் இதனை இடித்துவிட்டு ரூ.9 கோடி மதிப்பில் புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
இதற்கான கருத்து கேட்பு கூட்டம் சுவால்பேட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் நகர மன்ற தலைவர் லட்சுமி பாரி தலைமையில் நடைபெற்றது. ஆணையர் லதா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட வியாபாரிகள் பேசுகையில், ''கொரோனா காலத்தில் வியாபரத்தில் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். அதிலிருந்து மீள்வதற்கு கால அவகாசம் தேவை. மேலும், கட்டிடங்கள் எவ்வித பாதிப்பும் இல்லாமல் உள்ளது. எனவே கடைகளை நடத்த எங்களுக்கு குறைந்த பட்சம் 3 வருட கால அவகாசம் தேவை'' என்றனர்.
கூட்டத்தில் நகர மன்ற துணை தலைவர் கலாவதி அன்பு லாரன்ஸ், நகராட்சி பொறியாளர் ஆசிர்வாதம் மற்றும் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.