விற்பனை ஆகாததால் வீதியில் விட்டு சென்ற வியாபாரிகள்


விற்பனை ஆகாததால் வீதியில் விட்டு சென்ற வியாபாரிகள்
x

வடகாட்டில் பொங்கல் பண்டிகைக்கு வந்திருந்த கரும்புகள் உரிய விற்பனை இல்லாததால் வியாபாரிகள் வீதியில் விட்டு சென்றனர்.

புதுக்கோட்டை

கரும்பு விற்பனை

வடகாட்டில் பொங்கல் பண்டிகை விற்பனைக்கு வெளியூர் பகுதிகளில் இருந்து கரும்புகளை வியாபாரிகள் சரக்கு வேன் மூலமாக, கொண்டு வந்து கரும்பு கட்டு ஒன்று ரூ.250, ரூ.200, ரூ.100-க்கு விற்பனை செய்தனர். கடைசியில் ஒரு கட்டு ரூ.50-க்கு கூட விற்பனை செய்தனர். மேலும் பொதுமக்களிடையே கரும்பு வாங்குவதில் போதிய ஆர்வம் இல்லாததால் மீதப்பட்ட சுமார் 100 கட்டு கரும்புகளை சும்மா கூட யாரும் எடுத்து செல்லாத நிலையில், அப்படியே கிடந்து வருகின்றன.

வீதியில் விட்டு சென்ற வியாபாரிகள்

கடந்த ஆண்டுகளில் விற்பனைக்கு வந்திருந்த அனைத்து கரும்புகளும் விற்று தீர்ந்தன. இந்நிலையில், இந்த ஆண்டு அதே போல விற்பனை ஆகி விடும் என்ற நம்பிக்கையில் வாடகை வாகனம் மூலமாக, கொண்டு வந்து விற்பனை செய்தனர். இந்நிலையில் விற்பனை ஆகாமல் தேக்கம் அடைந்த கரும்பு கட்டுகளை மீண்டும் வாடகை கொடுத்து எடுத்து செல்ல மனமில்லாமல் வியாபாரிகள் வீதியில் அப்படியே போட்டுவிட்டு சென்று விட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.


Next Story