வியாபாரிகள் மனு அளிக்கும் போராட்டம்
டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை திரும்ப பெறக்கோரி வியாபாரிக்ள மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை
வணிகவரித்துறை சார்பில் அமல்படுத்தப்பட்டுள்ள டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை திரும்ப பெறக்கோரி வந்தவாசியில் வியாபாரிகள் கவன ஈர்ப்பு மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையொட்டி அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, அனைத்து வியாபாரிகள் சங்கம் மற்றும் நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கத்தினர் நகரில் ஊர்வலமாக சென்றனர். வந்தவாசி பழைய பஸ் நிலையம் அருகில் இருந்து தொடங்கிய ஊர்வலம் பஜார் வீதி, தேரடி, சன்னதி தெரு வழியாக வணிகவரித்துறை அலுவலகம் சென்றடைந்தது.
அதைத் தொடர்ந்து டெஸ்ட் பர்ச்சேஸ் முறையை திரும்ப பெறக்கோரி வணிகவரித்துறை அலுவலர் கே.பாண்டியனிடம், வியாபாரிகள் சங்கத்தினர் மனு அளித்தனர்.
Related Tags :
Next Story