வணிகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்


வணிகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம்
x
தினத்தந்தி 10 Jan 2023 6:45 PM GMT (Updated: 2023-01-11T00:16:14+05:30)

திண்டுக்கல்லில் வணிகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

ஜி.எஸ்.டி. விதிகளை எளிமையாக்க வேண்டும், சோதனை கொள்முதல் அபராத முறையை ரத்து செய்யவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை அட்டை அணிதல், ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களை அறிவித்தனர்.

இதை தொடர்ந்து நேற்று திண்டுக்கல்லில் வணிகர்கள் கோரிக்கை அட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கைகள் அடங்கிய நோட்டீசுகளை கடைகளுக்கு சென்று வழங்கினர். இதற்கு மண்டல தலைவர் கிருபாகரன் தலைமை தாங்கினார். இதில் நகர தலைவர் ரவி சுப்பிரமணியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது திண்டுக்கல் வாணிவிலாஸ் பகுதி உள்பட பல்வேறு பகுதிகளில் கடைகளுக்கு சென்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.


Next Story