பாரம்பரிய கலை விழா நிறைவு
தரங்கம்பாடி டேனிஷ் கோட்டையில் பாரம்பரிய கலை விழா நிறைவு பெற்றது
மயிலாடுதுறை
பொறையாறு:
தரங்கம்பாடியில் உள்ள வரலாற்று புகழ்பெற்ற டேனிஷ் கோட்டையில் தமிழ்நாடு அரசின் கலை துறை மற்றும் தொல்லியல் துறை சார்பில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய, கிராமிய மரபு சார் கலை விழா 2 நாட்கள் நடைபெற்று வந்தது. இதன் நிறைவு விழா நேற்றுநடந்தது. முதல் நாள் நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மரபு வழி கலைஞர்கள் கலந்து கொண்டு கட்டைகால் ஆட்டம், மாடாட்டம், மயிலாட்டம், நையாண்டி மேளம், கரகாட்டம், சிவசக்தி காளியாட்டம், தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கலை நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். 2-ம் நாளான நேற்று கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
Related Tags :
Next Story