பாரம்பரிய இன சேவல் கண்காட்சி


பாரம்பரிய இன சேவல் கண்காட்சி
x

பாரம்பரிய இன சேவல் கண்காட்சி நடந்தது.

திருச்சி

சோமரசம்பேட்டை:

திருச்சி சோமரசம்பேட்டை அருகே வயலூரில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் நேற்று பாரம்பரிய இன சேவல் கண்காட்சி நடைபெற்றது. இதில் திருச்சி மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, பெங்களூரு, கேரளா, ஐதராபாத் போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் மற்றும் மதுரை, திண்டுக்கல், கரூர், கிருஷ்ணகிரி, சேலம், ஓசூர், ஈரோடு, காரைக்குடி, பொள்ளாச்சி போன்ற மாவட்டங்களில் இருந்தும் சுமார்250-க்கும் மேற்பட்ட சேவல்கள் கண்காட்சிக்கு கொண்டு வரப்பட்டன. இந்த கண்காட்சியில் தமிழ்நாடு பாரம்பரிய சேவல்களான காகம், மயில், ஊலான், கீரி, வெள்ளை மற்றும் பிறநிற சேவல்களான பூதி வகையை சேர்ந்த சேவல்கள் இடம்பெற்றன. இதில் வெற்றி பெற்ற 5 சேவல்களின் உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக 4 கிராம் தங்க நாணயமும், 2-வது பரிசாக 10 சேவல்களின் உரிமையாளர்களுக்கு 2 கிராம் தங்க நாணயமும், 3-வது பரிசாக 15 சேவல்களின் உரிமையாளர்களுக்கு ஒரு கிராம் தங்க நாணயமும் மற்றும் 4-வது பரிசாக 20 சேவல்களின் உரிமையாளர்களுக்கு மின்விசிறியும் வழங்கப்பட்டது. இந்த கண்காட்சியில் முதலிடம் பிடித்த சேவலின் உரிமையாளருக்கு சிறப்பு பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்பட்டது.


Next Story