பாரம்பரிய உணவு திருவிழா
தளபதிசமுத்திரத்தில் பாரம்பரிய உணவு திருவிழா நடைபெற்றது.
திருநெல்வேலி
இட்டமொழி:
நாங்குநேரி யூனியன் தளபதிசமுத்திரம் ஊராட்சியில் தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் சார்பில் பாரம்பரிய உணவு திருவிழா போட்டிகள் நடைபெற்றது. இப்போட்டியில் ஸ்ரீவிநாயகா, அன்னை இந்திரா, சவுந்திரநாயகி, மாருதி, ரோஜா போன்ற 20-க்கும் மேற்பட்ட மகளிர் குழுவினர் கலந்து கொண்டனர்.
ஊராட்சி மன்ற தலைவர் பாலகிருஷ்ணன், துணைத்தலைவர் அருள்ராஜ் ஜேம்ஸ் மற்றும் பொருளாளர் முத்துலட்சுமி, சமுதாயவள பயிற்றுனர் சுபேதா, சமூக வல்லுனர் சித்ரா, சியாமளா, எப்சிபா ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் முதல் பரிசை தளபதிசமுத்திரத்தை சேர்ந்த மாருதி குழு பெற்றது.
Related Tags :
Next Story