50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள்


50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள்
x

மயிலாடுதுறை வட்டாரத்தில் 50 சதவீத மானியத்தில் பாரம்பரிய நெல் ரகங்கள் வேளாண் உதவி இயக்குனர் தகவல் அளித்தார்

மயிலாடுதுறை

மயிலாடுதுறை வேளாண் உதவி இயக்குனர் சுப்பையன் வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மயிலாடுதுறை வட்டாரத்தில் பாரம்பரிய நெல் ரகங்களான மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுனி, ஆத்தூர் கிச்சளிசம்பா போன்றவை 50 சதவீத மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இந்த பாரம்பரிய நெல் ரகங்கள் மயிலாடுதுறை, காளி, வில்லியநல்லூர், மணல்மேடு ஆகிய பகுதிகளில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டு மானியத்தில் வழங்கப்படுகிறது. எனவே அனைத்து விவசாயிகளும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி அலுவலக வேளை நேரங்களில் நேரில் சென்று வாங்கி பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



Next Story