காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு


காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு
x

பரமத்திவேலூர் காவிரி பாலத்தில் காற்றாலை விசிறி இறக்கை ஏற்றி சென்ற லாரியால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

காற்றாலை இறக்கை

தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து சுமார் 76 மீட்டர் நீளத்தில் காற்றாலை விசிறியின் இறக்கை நீளமான லாரி ஒன்றில் ஏற்றப்பட்டு கர்நாடகா மாநிலத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்த லாரி நேற்று காலை கரூர் வழியாக நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூருக்கு வந்து கொண்டிருந்தது. நீளமான இறக்கை கொண்டு சென்றதால் அந்த லாரியை பின்னால் வந்த அனைத்து வாகனங்களும் முந்தி செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

போக்குவரத்து நெரிசல்

குறிப்பாக காவிரி ஆற்றுப்பாலத்தில் இந்த லாரி செல்லும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் ஆற்றுப்பாலத்தில் இருந்து போலீஸ் சோதனை சாவடி வரை பஸ்கள், லாரிகள், கார்கள், வேன்கள் உள்ளிட்ட வாகனங்கள் அணிவகுத்து நின்றன. நீண்ட நேரம் கழித்து அந்த லாரிக்கு பின்னால் மற்ற வாகனங்கள் மெதுவாக சென்றன.

இந்த லாரியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியாமல் பொதுமக்கள் தவித்தனர். காற்றாலை இறக்கையை ஏற்றி செல்லும் லாரிகள் இரவு நேரத்தில் பயணித்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story