மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு


மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு
x

மரம் சாய்ந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

வேலூர்

வேலூரில் இருந்து ஒடுகத்தூருக்கு இலவம்பாடி வழியாகச் செல்லும் சாலையின் இரு புறங்களிலும் பழமை வாழ்ந்த புளிய மரங்கள் அதிக அளவில் உள்ளன. கடந்த மூன்று நாட்களாக தொடர் மழை அந்தப் பகுதியில் பெய்து வந்தது. இதனால் பழமை வாய்ந்த புளியமரம் ஒன்று வேரோடு சாய்ந்தது. இதனால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டு அந்த வழியாகச் சென்ற கார், வேன், லாரி, பஸ் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் செல்ல முடியாமல் சாலையில் நின்றது. தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து புளிய மரத்தை அப்புறப்படுத்தினர். இதனைத் தொடர்ந்து வாகனங்கள் வழக்கம்போல் சென்றன.


Next Story