பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு


பாறைகள் உருண்டு விழுந்து போக்குவரத்து பாதிப்பு
x

ஏலகிரி மலையில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூர்

ஏலகிரி மலையில் கடந்த சிலநாட்களாக பெய்த கனமழையால் கொண்டை ஊசி வளைவு சாலையில் பாறைகள் உருண்டு விழுந்தது போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஏலகிரிமலையில் கனமழை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட ஏலகிரி மலை தமிழ்நாட்டின் சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஏலகிரி மலைக்கு செல்லும் சாலை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டது. இங்கு கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பல மாவட்டங்களிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

ஏலகிரி மலையில் மழைக்காலங்களில் மலைப் பாதைகளில் பாறைகள் உருண்டு விழுவது வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில் திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, நாட்டறம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்தது.

பாறைகள் உருண்டு விழுந்தன

இந்த கன மழை காரணமாக ஏலகிரி மலையில் உள்ள 2-வது கொண்டை ஊசி வளைவு மலைபாதையில் பாறைகள் உருண்டு விழுந்தன. இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்ததும் திருப்பத்தூர் நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் சீனிவாசன் உத்தரவின் பேரில் சாலை ஆய்வாளர் எஸ்.வெங்கடேசன் தலைமையில் சாலை பணியாளர்கள் சென்று சாலையில் உருண்டு விழுந்த பாறைகளை அப்புறப்படுத்தினர். அதைத்தொடர்ந்து போக்கு வரத்து சீரானது.


Next Story