ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு
ரெயில்வே கேட் மூடப்பட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திண்டுக்கல்
வடமதுரையில் இருந்து காணப்பாடி செல்லும் சாலையில் ரெயில்வே கேட் ஒன்று உள்ளது. இந்த ரெயில்வே கேட் பராமரிப்பு பணிக்காக நேற்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மூடப்பட்டது. தொடர்ந்து ரெயில் தண்டவாளத்தில் உள்ள ஜல்லிக்கற்கள் மற்றும் சிமெண்ட் கற்களை மாற்றி அமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர். இதனால் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் அந்த வழியாக வேலாயுதம்பாளையம், காணப்பாடி, பாறைப்பட்டி, சிங்காரக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டனர். மேலும் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது. மேலும் வாகன ஓட்டிகள் ஏ.வி.பட்டி சாலை வழியாக 5 கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
Related Tags :
Next Story